தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா தலைமையிலான போலீசார் தாளமுத்துநகர் மேற்கு சுனாமி காலனி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் கண்ணன் மகன் நாராயண நவீன்(19) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா பொட்டலம் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து சுமார் 25 கிராம் கஞ்சா பொட்டலத்தையும் பறிமுதல் செய்தனர்.


