தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொள்ள இன்று வருகை தந்தார்.
இதற்காக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சேரகுளத்தில் அங்கன்வாடி கட்டிடத்தினை திறந்து வைத்து விட்டு கிளம்பி சென்றார்.
அப்போது திடிரென கருங்குளம் மெயின்ரோட்டில் இருந்த ஒரு டீக்கடையில் திடிரென டீ குடிப்பதற்காக இறங்கினார். அவர் கடையின் முன்பு போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து டீ குடித்தார். அவருடன் தூத்துக்குடி மேயர் ஜெகன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்பட பலர் உடன் இருந்து டீ குடித்தனர்.
எம்.பி. திடிரென டீக்கடையில் அமர்ந்து டீ குடித்த நிகழ்ச்சி அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்தனர்.


