செய்துங்கநல்லூரில் உள்ள 10.93 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி. கட்டிடத்தினை திறந்துவைத்து அங்குள்ள சிறுவர் சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
அங்கு வைத்து செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், விவசாய சங்க தலைவர் குமார் ஆகியோர் கனி மொழி எம்.பியிடம் மனு ஒன்று கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது. “தற்போது தங்கள் முயற்சியால் திருச்செந்தூர் ரயில் மின் மயமாக்கப்பட்டு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. ஈரோடு ரயிலை திருச்செந்தூருக்கு வந்து செல்ல நடவடிக்கையும் எடுத்து வருகிறீர்கள். இதற்காக எங்கள் கிராமத்து மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆனால் மிகப்பெரிய கிராசிங் ரயில் நிலையமான செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ் பிரஸ் ரயிலும் நின்று செல்கிறது. பாலக்காடு ரயிலும் கொரோனா காலத்துக்கு முன்பு வரை நின்று சென்றது. ஆனால் தற்போது பாலக்காடு ரயில் மட்டும் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நின்றுசெல்வது இல்லை. நாங்கள் பல முறை மனு செய்தும் நடவடிக்கை இல்லை. இந்த வாரத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் 300க்கு மேற்பட்டவர்கள் தங்காள் சமூக வலைதளம் மூலமாக இந்த கோரிக்¬கையை வலியுறுத்தி வந்தனர்.
எங்கள் கிராமத்தினை சுற்றி 43 கிராமங்கள் உள்ளன. எனவே இந்த ஊரில் பாலக்காடு எக்ஸ்பிர¬ஸ் ரயிலை நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என கூறியிருந்தனர்.
செய்துங்கநல்லூர் நூலக வாசகர் வட்டம் சார்பில் வாசகர் வட்ட தலைவர் திருமலை, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் செய்துங்கநல்லூருக்கு மாவட்ட ஆட்சி தலைவர் மூலமாக நூலக கட்டிடம் கட்ட அனைத்து நடவடிக்கையும் எடுத்தனர். அதற்காக நன்றியை தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கருங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் கோமதி ராஜேந்திரன், துணை திட்ட அலுவலர் லீமா ரோஸ், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட இலக்கிய கலை மற்றும் இசை சங்க உறுப்பினர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கருங்குளம் ஒன்றிய திமுக செயலாளர் இசக்கி பாண்டியன், சுரேஷ் காந்தி, பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், விவசாய சங்க தலைவர் குமார், ஒன்றிய ஆணையாளர் ஆண்ரோ , கூடுதல் ஆணையாளர் பாலசுப்பிரமணியன், பொறியாளர் சித்திரை சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக சேரகுளத்தில் உள்ள அங்கன் வாடி கட்டிடத்தினை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். பின்பு கருங்குளம் உள்ள டீ கடையில் அமர்ந்து டீ குடித்தார்.


