திருநெல்வேலியில் நடந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க கருத்தரங்கில் தாமிரபரணி ஆர்வலர்களை ஒன்றிணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை முருகன்குறிச்சி பாலபாக்யா ஹாலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாபெரும் கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் வற்றவிடலாமா என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது. முன்னாள் ரோட்டரி கவர்னர் ஆறுமுகபாண்டியன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க தென்மாநில இணை அமைப்பாளர் சுவாமிநாதன், தென் மாநில அமைப்பாளர் மதிவாணன், தாமிரபரணி வரலாற்று ஆய்வாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, மாநில இணை அமைப்பாளர் கோ. கண்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். தென்பாரத அமைப்பளர் கணபதி ஹெக்டே நிறைவுரையாற்றினார். மாநகர பொருப்பாளர் சிவ செல்வராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கதிரவன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் அபிஷ் விக்னேஷ் இயக்கிய வற்ற விடலாமா ஜீவ நதியை என்னும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இயக்குனர் அபிஷ் விக்னேஷ், வழக்கறிஞர் சுதர்சனம், பொருநை மைந்தன் காஜா முகைதீன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். தச்சை மண்டல பொறுப்பாளர் ராம சுப்பு நன்றி கூறினார். தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடும் ஆர்வலர்களை ஒன்றிணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


