தூத்துக்குடி மாவட்டத்தின் மத்திய அரசு கூடுதல் வழக்கறிர்களாக இசக்கிலட்சுமி, மற்றும் என்.சுரேஷ்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை மூத்த வழக்கறிஞர் மதாப் சரன் புருஷ்டி தூத்துக்குடி மாவட்டத்தின் மத்திய அரசு வழக்கறிஞரையும், மாவட்ட மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர்களையும் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி தூத்துக்குடி மாவட்ட மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராக தூத்துக்குடி மட்டக்கடை சேதுராஜா தெருவை சேர்ந்த பெண் வழக்கறிஞர் இ. இசக்கி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர் இசக்கி லட்சுமி மாநகர் மாவட்ட இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளராகவும், இவரது கணவர் தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கான மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராக பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் என்.சுரேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை மூத்த வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.


