ஏரல் விஸ்வகர்மா கலை கூடத்தில் 01.03.2022,காலை 8.00 மணியளவில் எம்.கே. தியாகராஜ பாகவதரின் 112 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இதில் பாரதீய ஜனதா கட்சி அமைப்பு சாரா தொழில் சங்க மாவட்டதலைவர் முத்துமாலை ஆச்சாரி தலைமை வகித்து எம்.கே.தியாகராஜ பாகவதர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.சமூக ஆர்வலர் கற்குவேல் அய்யப்பன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.பாகவதரின் சிறப்புகளை கவிஞர் ராஜன் சொற்போழிவாற்றி நன்றி கூறினார்.யோகா ஆர்வலர் தென்கரை மகாராஜன் நிகழ்ச்சியே ஒருங்கிணைப்பு செய்தார்.ராமலிங்கம்,மாரி,முத்து,முத்து ஸ்ரீ மற்றும் பலர் விழாவில் கலந்து கெண்டனர்.