நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் திருநெல்வேலி பிரமிள் நூலகம் இணைந்து உருவாக்கிய நூல் வரலாற்றில் திருநெல்வேலி என்ற நூல் இந்த நூலை பூர்ணா தொகுத்துவழங்கியுள்ளார். இந்த நூல் வெளியிட்டு விழா இன்று மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நூலில் திருநெல்வேலியை பற்றிய 32 கட்டுரைகள் உள்ளன.
இதில தொ. பரமசிவன் ச. நவநீதி கிருஷ்ணன் ஆகியோர் எழுதிய பாளையங்கோட்டை, பேராசிரியர் கி. நாச்சி முத்துவின் பொருநை, முத்தாலங்குறிச்சி காமராசுவின் தாமிரபரணியின் படித்துறைகளும் மண்டபங்களும் கோபுரச் சிற்பங்களும், முனைவர் இளங்கோமணி யின் திருநெல்வேலியின் தோற்றமும் அதன் பரிமாணமும், பேராசிரியர் இரா. இலக்குவனனின் திருநெல்வேலி ஊர்ப்பெயர்க் பழமையு-ம் மாற இளமையும், முனைவர் மு.செல்வக்குமாரின் ஆதிச்சநல்லூர் நாகரிகம் ஒரு வரலாற்றுப் பார்வை, பேராசிரியர் கண்ணகியின் திருநெல்வேலி பழங்குடி மக்கள், ஆ. சிவசுப்பிரமணியனின் நெல்லைச் சீமையில் கிறித்துவம் பரவிய வரலாறு, முனைவர் த. ஜான்சி பால்ராஜ் எழுதிய திருநெல்வேலியின் சமூக சீர்த்திருத்தத்தில் பெண் ஆளுமைகள், எழுத்தாளர் இரா. நாறும்பூநாதனின் நான்கு பெண்மணிகள், எழுத்தாளர் குருசாமி மயில் வாகனனின் திருநெல்வேலிப் போர் இணையற்ற பெருமையும் ஈடற்ற புகழும் , மாரியப்பன் இசக்கி திருநேல்வேலியில் சமணம், பேராசிரியர் நா.இராசந்திரனின் தமிழ் நாட்டார் வழக்காற்றியலின் தந்தை பேராசிரியர் நா.வா. பேராசிரியர் இரா . காமராஜவின் தி.க.சி நீர் பாய்ச்சி, எழுத்தாளர் அப்பணசாமியின் முதுமக்கள் கதைகள், முனைவர் த. கண்ணா கருப்பையா மாணவருலகில் பேரெழுச்சி மிகு வித்தப் பேராசன் தொ.பரமசிவன், பேராசிரியர் சௌந்தரமகாதேவன் கொட்டுச் சப்தமும் பாளையங்கோட்டை தசரா சப்பரங்களும், முனைவர் வ. ஹரிஹரன் அவர்களின் தொ.மு.சி. ரகுநாதனும் இலக்கியமும், மாரியப்பன் இசக்கியின் நாடகக்கலையை ஊட்டி வளர்த்த பர்ணடியர்கள், முனைவர் செங்குமார் அவர்களின் சிறுதெய்வக் கதையாடல் ஆணைக்குளம் தங்கமுத்து அம்மன் தோற்ற வரலாறு, ப. தாணப்பன் எழுதிய தெருபுராணம், ம. சக்தி வேலாயுதம் எழுதிய செய்வனத் திருந்தச் செய் ஜேம்ஸ் கோயில் ராஜ் எழுதிய ஆரம்ப சுதந்திர ஐம்பதுகளில் நெல்லை பாளை நிலமை எழுத்தாளர் மா. கமலவேலன் எழுதிய இராஜவல்லிபுரம் பழைய நினைவுகள் பழகிய நினைவுகள் தோழர் எஸ் காசி விஸ்வநாதன் எழுதிய திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுவுடைமை இயக்கம் முனைவர் ச.இளங்கோமணி எழுதிய திருநெல்வேலி பதிவுகளும் பனுவல்களும் பேராசிரியர் சு.பேச்சியம்மாள் எழுதிய கங்கைகொண்டான் வரலாறும் கோயில் கல்வெட்டுகளும் எழுத்தாளர் அண்டனூர் சுரா எழுதிய கசப்புக்கவி ஆண்டான் கவிராயர் பூர்ணா எழுதிய மதுத்திவலை சிந்து பூந்துறையும் கழுமரம் மொக்குத் தெருவும் முனைவர் த.ஜான்சி பால்ராஜ் எழுதிய தென்னிந்திய ஆக்ஸ்போர்ட்டின் வடிவமைப்பில் இரேனியஸ்வாழைகுமார் எழுதிய திருநெல்வேலி புள்ளினங்கள் முனைவர் ப.பாலசுப்பிரமணியன் எழுதிய திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலி ஆகிய கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன.
நூல் வெளியிட்டு விழா மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மேலாண்மை இயக்குனர் சண்முகம் சரவணன் , புதிய ஆராய்ச்சி பொறுப்பாசிரிரியர் முனைவர் நா. இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலர் லெ .மீனாட்சி சுந்தரம் தலைமை வகிக்கிறார். நியூ செஞ்சுரிபுத்தக நிறுவனம் மண்டல மேலாளர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்று பேசுகிறார். நூலை தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய துணைத்தலைவர் மயன் தி.த. ரமேஷ் ராஜா வெளியிடுகிறார். கோட்டாட்சியர் இரா . சந்திர சேகர், அருங்காட்சியகம் காப்பாட்சியர் முனைவர் சிவ. சத்தியவள்ளி ஆகியோர் நூலைப் பெற்றுக்கொள்கிறார்கள். ம.சு பல்கலைகழக நூலகர் முனைவர் பாலசுப்பிரமணியன், இரா. நாறும் பூநாதன், முனைவர் ஹரிஹரன், முனைவர் சௌந்தர மகாதேவன் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். தொகுப்பாசிரியர் பூர்ணா ஏற்புரை வழங்குகிறார். கவிஞர் தாணப்பன் கதிர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.


