திருச்செந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் அருள்ராஜ் (37). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், அருள்ராஜ், 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் இந்திரா விசாரணை நடத்தி, பாோக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து அருள்ராஜை கைது செய்தார்.


