தூத்துக்குடி பிளாக் ஃபாரஸ்ட் கேக் கடையில் புத்தாண்டை முன்னிட்டு கேக் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
புத்தாண்டு என்பது ஒரு ஆண்டின் தொடக்க நாளைக் குறிப்பதாகும். இதை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்வார்கள். புத்தாடை அணிந்தும், இனிப்புகளைப் பரிமாறி க்கொண்டும், ஒருவரையொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டும் தங்களின் சந்தோஷத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்வார்கள். கிறிஸ்துமஸ் விழாவிற்கு எப்படி கேக் முக்கியமான ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறதோ, அதுபோன்றுதான் புத்தாண்டு நாளில் பலவகையான கேக்குகள் இடம் பெறுகின்றன.
அந்த வகையில், 2025-ஆவது ஆங்கிலப் புத்தாண்டு உலகம் முழுவதும் வெகு விமரிசையாகக் நாளை (ஜன.01) கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் பிளாக் ஃபாரஸ்ட் கேக் கடை அந்தோணியார் சர்ச் அருகில், விவிடி சிக்னல் அருகில், எட்டயபுரம் சாலை, சாயர்புரம் பகுதிகளில் இயங்கி வருகிறது. இங்கு புத்தாண்டை முன்னிட்டு கேக் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஸ்ட்ராபெர்ரி, வெண்ணிலா, பட்டர் ஸ்காட்ச், ஃப்ரூட் கேக், பைனாப்பிள் கேக், ரசமலை, பிளாக் பாரஸ்ட், லெமன் கேக் பிளேவர் உள்ளிட்ட பல்வேறு வகையான கேக்குகள் விற்பனை ஆகி வருகிறது. மக்கள் ஆர்வமுடன் கேக் வகைகைள வாங்கிச் செல்கின்றனர்.


