தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து வருகின்றனர்.
கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, திருவள்ளுவர் புகழை தமிழகம் முழுவதும் பறைசாற்றும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோன்று திருவள்ளுவர் சிலைகளும் அமைக்க அறிவுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி முத்தநகர் கடற்கரையில் கன்னியாகுமரியில் அமைந்து உள்ள திருவள்ளுவர் சிலை போன்ற அமைப்பில், 10 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை நேற்று அமைக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலை தத்ருபமாக கற்சிலை போன்று காட்சி அளிக்கிறது. இந்த சிலை முன்பு நின்று பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


