செய்துங்கநல்லூரில் மார்கழி பஜனை விழா நடந்தது. இதையட்டி செய்துங்கநல்லூர் சோமசுந்தர விநாயகர் கோயிலில் விநாயகருக்கு தினமும் சிறப்பு அபிசேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து பஜனை கு-ழுவினர் வீதி வீதியாக சென்று பஜனை செய்தனர். அவர்கள் சோமசுந்தர விநாயகர் கோயிலில் இருந்து கிளம்பி முககிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் விநாயகர் கோயிலை அடைந்தனர். பஜனை குழுவினரை சோமசுந்தர விநாயகர் கோயிலில் வைத்து சேனை தலைவர் சமுதாய தலைவர் சுப்பிரமணியன் செயலாளர் கணேசன், பொருளாளர் கே. சுப்பிரமணியன், தர்மகர்த்தா மற்றும் அறங்காவலர் ப.மணி உள்பட பலர் வரவேற்றனர். அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். பஜனை குழு செல்லையா பஜனையை வழிநடத்தினார். பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர் கணேச பட்டர் செய்திருந்தார்.


