ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுகவினர் சாலை மறியல். 100க்கும் மேற்பட்டோர் கைது.
தமிழகம் முழுவதும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இன்று சாலைமறியல் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் திமுக, கம்னியூஸ்ட் மற்றும் அதன் தோழமை கட்சிகள் 100க்கும் மேற்பட்டோர் திமுக ஒன்றியச் செயலாளர் இசக்கிப்பாண்டியன் தலைமையில் திருநெல்வேலி&திருச்செந்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண்மை சட்டங்களுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் போலிசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டத்தில் அடைத்தனர்.
இதற்கிடையில் வியாபாரிகள் சங்கத்தினை மாநில தலைவர் வெள்ளையன் உத்தரவினி பேரில் காலை 10மணி முதல் 12 மணி வரை கடையடைப்பு பேராட்டம் நடத்தினர்.
==


