தூத்துக்குடி தெற்கு மாவட்டம் கருங்குளம் தெற்கு ஒன்றியம் சார்பில் செய்துங்கநல்லூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
கருங்குளம் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் செங்கான் தலைமை வகித்தார், கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார், கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் உதயசங்கர், சிறுபான்மை மாவட்ட செயலாளர் முஸ்தபா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் விஜி உடையார், ஊராட்சிக் கழகச் செயலாளர் கல்லான்டன், ஒன்றிய கவுன்சிலர்கள் அண்ணாமலை, செந்தாமரை, கதிரேசன், சின்னதுரை, சுப்பையா பாண்டியன், பூல்பாண்டியன், பரமசிவன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


