தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற எழுத்தாளருக்கு
செய்துங்கநல்லூர் மக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு கடந்த 1ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமை செயலகத்தில் வைத்து தமிழ்ச்செம்மல் விருது வழங்கினார். இவருக்கு கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், அம்பாசமுத்தரம், கழுகுமலை , திருநெல்வேலி உள்பட பல இடங்களில் பாராட்டுவிழா நடந்து வருகிறது. தற்போது அவர் வசிக்கும் செய்துங்கநல்லூர் கிராம மக்கள் சார்பில் பாராட்டுவிழா நடந்தது.
செய்துங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி நாதன் த லைமை வகித்தார். ஜோஸ் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி தாளாளர் ஓ.பி. முஸ்தபா, தொழில் வர்த்தக சங்கத்தலைவர் அய்யாக்குட்டி, விவசாய சங்க தலைவர் குமார், தமிழ்நாடு வாழ்வாதார இயக்க கருங்குளம் வட்டார மேலாளர் மல்லிகா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வாசகர்வட்ட தலைவர் திருமலை நம்பி வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், செய்துங்கநல்லூர் இனஸ்பெக்டர் ராஜசுந்தர், ஓய்வு பெற்ற திருநெல்வேலி நூலகர் முத்துகிருஷ்ணன், வல்லநாடு சித்த மருத்துவர் செல்வகுமார், பாளையங்கோட்டை செந்தமிழ அறக்கட்டளை ஆலோசகர் ஆனந்தன், பட்டி மன்ற பேச்சாளர் நெல்லை முத்தமிழ், கிராம உதயம ஆழ்வார்தோப்பு மேலாளர் வேல் முருகன், சேவியர் கல்லூரி விரிவுரையாளர் ஜோஸ்பின்பாபா, எழுத்தாளர் ஜான்சி பால்ராஜ், உள்பட பலர்பேசினர். தூத்துக்குடி மாவட்ட நூலக அலுவலர் ராம் சங்கர் சிறப்புரையாற்றினார். தமிழ்ச்செம்மல் விருதாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஊர் பொதுமக்களால் கௌரவிக்கப்பட்டார். வாசகர் வட்ட துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். நூலகர் லெட்சுமண குமார் நன்றி கூறினார். நூலக புரவலர்கள் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, சமூக சேவகர் சக்தி வேல், ஊராட்சி செயலர் சங்கரபாண்டியன் ஆகியோர் நூலக புரவலர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கவிஞர் துரைப்பாண்டியன், நூலகத்தினை சேர்ந்த செல்லப்பா, சிவாஜி முருகேசன், முத்துசாமி ஜுவா , திருப்பதி, வேம்புத்துரை, மாசானம், பாலசுப்பிரமணியன், தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் பொருளாளர் பால்சாமி, துணைத்தலைவர் மந்திரம் பிள்ளை, துணைப்பொருளாளர் ஐயப்பன், தளவாய் செல்வன், உதயகுமார், முருகன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்வி, சுப்புலெட்சுமி , சின்னத்துரை, முருகன், பட்டுராஜா, செல்வி, சொர்ணம், தாயம்மாமள், முருகன், சுப்பையாபாண்டியன், ராஜி, சித்திரைபாண்டி, உள்பட பலர் கலந்துகொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் அரசு கிளை நூலகம், செய்துங்கநல்லூர் ஊராட்சி மன்றம், தொழில் வர்த்தக சங்கம் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் செய்யப்பட்டது.
&&&


