சாத்தான்குளம் வடக்கு ஆர்.சி. தெரு ஸ்ரீ தேவி மாரியம்மன் கோயில் கொடைவிழாவில் எழுத்தளார் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய சாத்தான்குளம் ஜமீன்தார் பற்றிய வணக்கம் மும்பையில் தொடராக வெளிவந்து தி இந்து தமிழ் திசை பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட தேரிக்காட்டு ஜமீன்தார் என்னும் நூல் வெளியிட்டு விழா கோயில் வளாகத்தில் நடந்தது.
கோயில் விழா கமிட்டி தலைவர் சரவணன் தலைமை வகித்தார். டிரஸ்டி குழு தலைவர் ஐகோர்ட் பாண்டியன், சின்னத்துரை, ஐ.ஓ.பி.ஓய்வு பெற்ற மேலாளர் மனோகரன், முன்னாள் கமிட்டி ததலைவர் வெள்த்துரை, ஆண்கள் கபாடி குழு மேலாளர் சுந்தர்ராஜ் ஆயோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கௌரவிக்கப்பட்டார். அதன் பின் அவரது தேரிக்காட்டு ஜமீன்தார்கள் நூல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூத்த கோமரத்தான் கணபதி, மணிகண்டன், பாலசுந்தரம், பொன்பாண்டி, மாசனம், இசக்கிமுத்து, பஞ்சாயத்து எழுத்தர் சக்கரவர்த்தி, ரயில்வே டி.டி.ஆர் முருசேன்உள்படபலர்கலந்துகொண்டனர். காசி நன்றி கூறினார்.


