
செய்துங்கநல்லூர் வளர்ந்துவரும் நகரமாகும். இவ்வூரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி கொண்டிருக்கிறது. அதுபோலவே போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. புதன் கிழமை தோறும் சந்தையில் ஆயிரக் கணக்கான மக்கள் கூடுகிறார்கள். ஆனால் இந்த ஊருக்குள் வரும் சாலையில் வாகனங்கள் மிக வேகமாக வருகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இருபுறமும் வேகத்தடை அமைக்கவேண்டும் என பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கிருஷ்ணாபுரம் பகுதியில் விபத்து ஏற்படாமல் இருக்க சுமார் 5 இடங்களில் பேரிகார்டு வைத்துள்ளார்கள். அதுபோல செய்துங்கநல்லூரில் மூன்று இடங்களிலாவது பேரிகார்டு வைத்து போக்குவரத்து வேகத்தினை கட்டுப்படுத்த வேண்டும். விபத்தினை கட்டுப்படுத்த இது மிக உதவியாக இருக்கும். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதர், செய்துங்கநல்லூர்