செய்துங்கநல்லூரில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது.
ஓய்வுபெற்ற தபால் காரர் செல்லப்பா தலைமை வகித்தார்.
கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். மழை நீர் சேகரிப்பு குறித்தும், பள்ளி மாணவ மாணவிகளிடையே வாசிப்பு வழக்கத்தினை கூட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் கருத்துரை வழங்கப்பட்டது. கருவூல அலுவலர் சிவராமன், மணக்கரை போஸ்ட மாஸ்டர் காளிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர். சாமி நாதன், அப்துல் காதர், ராதாகிருஷ்ணன், செந்தில் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். நூலகர் துரை ராஜ் நன்றி கூறினார்.