ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் செய்துங்கநல்லூர் வர்த்தக சங்கத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
சங்க தலைவர் அய்யாகுட்டி தலைமை வகித்தார். செயலாளர் பிச்சை ராயன், பொருளாளர் பால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார். உணவு பாதுகாப்பு ஆய்வாளர் நாகபாலசுப்பிரமணியன், காவல் ஆய்வாளர் ராஜசுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு அலுவலர் பேசுகையில், வியாபாரிகள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பை தவிர்க்க வேண்டும், காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
அதன்பின்னர் காவல் ஆய்வாளர் ராஜசுந்தர் பேசுகையில், வியாபாரிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கை காப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், சமூக ஆர்வலர் சுடலை, வர்த்தக சங்க துணை தலைவர் மந்திரம், சுடலைமணி, சுவீட் கணேசன் உள்பட வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
&&


