கண்காணிப்பு கேமரா மூலம் குற்றவாளியை கண்டு பிடித்த செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலிசாரை எஸ்.பி. பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
செய்துங்கநல்லூரில் நடந்த வழக்கு ஒன்றில் குற்றவாளியை கண்காணிப்பு கேமரா கொண்டு செய்துங்கநல்லூர் போலிசார் கண்டு பிடித்தனர். இதை பாராட்டி செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜ சுந்தர், எஸ்.ஐ. முருகன், தலைமை காவலர் சுடலைக்கண்ணு, காவலர்கள் பாலசிங், காவலர் நயினார் ஆகியோரை பாராட்டினார். இவர்களுக்கு தூத்துக்குடி எஸ்.பி ஜெயக் குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 33 காவல் துறையினருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. க்கள் கோபி, செல்வன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து உள்பட பலர் இருந்தனர்.


