உடன்குடியில் வீடுபுகுந்து செல்போன் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி ஸ்ரீதேவி (44), நேற்று மதியம் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு வீட்டுக்குள் ஸ்ரீதேவி தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது ஒரு மர்ம நபர் அவரது வீட்டிற்குள் நுழைந்து செல்பானை திருட முயன்றுள்ளார். இதனைக் கண்ட ஸ்ரீதேவி அந்த அந்த வாலிபரை விரட்டிப் பிடிக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்த வாலிபர் திருடிய செல்போன் கீழே விழுந்துள்ளது. ஆனால் அந்த வாலிபர் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டாராம். இதுகுறித்து குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் கப் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் வீடுபுகுந்து செல்போன் திருடியது அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் அன்புராஜ் (24) எனத் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


