தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையில் இன்றைய தினம் ஊர்வசி அமிர்தராஜ் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரலுக்கு வருகை தந்தார். அவர் ஏரல் பஜாரில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஏரலில் தேர்தல் பணி அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஆழ்வார்திருநகரியில் தேர்தல் பணி அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் திறந்துவைத்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பாக ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் காங்கிரஸ் தேர்தல் பணி அலுவலகத்தை ஆழ்வார்திருநகரியில் திறந்துவைத்தார். முன்னதாக ஆழ்வார்திருநகரியில் உள்ள காமராஜர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கருணாகரன், ஆழ்வார்திருநகரி காங்கிரஸ் வட்டாரத்தலைவர் கோதண்டராமன், திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தர்ராஜ், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


