தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து துறை அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமர குருபரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளியில் தேர்தலை முன்னிட்டு முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தது. இதனை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையாளர் விஷ்ணு சந்திரன் ஐஏஎஸ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செந்தூர்ராஜன், ராக்கெட் ஏவுதள நில எடுப்பு வட்டாட்சியர் ராஜீவ் ஜாகூர் ஜேக்கப், சாத்தான்குளம் வட்டாட்சியர் செல்வகுமார் உள்பட ஆசிரியர்கள் மற்றும் இதர துறையினரும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.


