கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் கொரோனா நோய் தொற்று காலக்கட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரிசெய்ய நாட்டிற்கும் வீட்டிற்கும் நாம் செய்ய வேண்டிய பொறுப்பான கடமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
இந்த நிகழ்ச்சியை கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் குத்து விளக்கு ஏற்றி தலைமை வகித்து தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினார். கிராம உதயம் மையத்தலைவர்கள் ரீனா, சீதாலெட்சுமி, பேச்சியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் ஜெபமணி வரவேற்புரை ஆற்றினார். வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங், கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி, தனி அலுவலர் ரேவதி குமாரி, கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் முருகன் மற்றும் கிராம உதயம் மையத்தலைவர்கள் கருத்துரை வழங்கினார்கள். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் உச்சிமகாளி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.


