செய்துங்கநல்லூர் அருகே உள்ள வி.கோவில்பத்தில் பீமா தர்காவில் மதநல்லிணக்க கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்த விழாவிற்கு செய்துங்கநல்லூர் காவல்துறை ஆய்வாளர் ராஜசுந்தர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் கலீலுர் ரஹ்மான் கலந்து கொண்டார்.
திமுக கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருங்குளம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பக்கபட்டி சுரேஷ், மாவட்ட பிரதிநிதி கண்ணன், தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் குமார், பட்டன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கொம்பன், பார்வதிநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜநாயகம், வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் மாசிலாமணி, கிளைச் செயலாளர்கள் குண்டுமணி, கொள்ளீர்குளம் அருள்ராஜ், சகாயம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழா ஏற்பாட்டினை கருங்குளம் வடக்கு ஒன்றிய சிறுபான்மை நல உரிமை பிரிவு பொறுப்பாளர் புகாரி செய்திருந்தார்