செய்துங்கநல்லூர் – கொங்கராயகுறிச்சியில் வ.உ.சி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உறுதி மொழி ஏற்க்கப்பட்டது.
செய்துங்கநல்லூர் அண்ணா சிலை அருகில் நடந்த நிகழ்வுக்கு கட்டுமான தொழில் சங்கத்தினை சேர்ந்த ராஜ்குமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கருங்குளம் ஒன்றிய செயலாளர் ராமசந்திரன், சி.ஐ.டி.யூ ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாரியப்பன், சுப்பையா, வசவப்பபுரம் கிளை செயலாளர் வண்டிமலையான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சு.மணி நன்றி கூறினார்.
கொங்கராயகுறிச்சி காமராஜர் சிலை முன்பு நடந்த உறுதி மொழி ஏற்ப்புக்கு சி.ஐ.டி.யூ ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்பட மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியினர் செய்திருந்தனர்.


