உலகம் முழுவதும் கொரோனா தொற்று தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் ஜீன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சென்னையில் குடியிருந்து வந்தனர். அவர்கள் 31ம் தேதி சொந்த ஊரான செய்துங்கநல்லூருக்கு வந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தந்தை, தாய், மகன் மூவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.