செய்துங்நல்லூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது . இந்த விழாவிற்கு
தி.மு.க கருங்குளம் ஒன்றிய கழக பொறுப்பாளர் இசக்கி பாண்டியன் தலைமை தாங்கினார்.
மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் கலீலுர் ரஹ்மான், முன்னாள் அவைத் தலைவர் பட்டன், விவசாய அணி செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் நல்லமுத்து, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுடலை பண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
செய்துங்கநல்லூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கும் கருணாநிதி படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக ஒன்றிய கழக பொறுப்பாளர் இசக்கி பாண்டியன் வழங்கினார்.
இந்நிகழ்வில், இராமனுஜம்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீரங்கன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் மகாராஜன், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து உறுப்பினர் பட்டு துரை, கிளைக் கழக செயலாளர்கள் அலிபேக், தர்மலிங்கம், மதுபாலா மணி, முத்து பலவேசம், சிவ சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.