செய்துங்கநல்லூரில் உள்ள இந்தி ய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைக்கூட்டம் செய்துங்கநல்லூர் கரையடியூரில் நடந்தது. வடிவேல் தலைமை வகித்தார். கிளைச்செயலாளராக கண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்றிய செயலாளர் ராமசந்திரன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மணி , மணிகண்டன் இசக்கி முத்து,சசி,முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வி,கோவில் பத்து கிளை கழக கூட்டம் அறிவழகன் தலைமையில் நடந்தது. கிளைச்செயலாளராக கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல ஆண்டுகளாக கட்டிமுடிக்கப்பட்டு நீரேற்றி மக்கள் பயன்பாடடுக்குவிடப்டாமல் உள்ள மேல்நிலைய நீருதேக்க தொட்டியில் நீரேற்றி மக்கள் பய்பாட்டுக்கு விட கோரியும், தேங்கி கிடக்கும் கழிவு நீரை அப்புறப்படுத்த கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய செயலாளர் ராமசந்திரன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கொங்கராயகுறிச்சி அருகில் உள்ள திருச்செந்தூர் பட்டியில் நடந்த கூட்டத்திற்கு பொன்னுசாமி தலைமை வகித்தார். சிதில மடைந்த மின்கம்பத்தினை மாற்றுவது சம்பந்தமாக அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாரியப்பன், சிவசக்தி, கணேசன், சந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.ஒன்றிய செயலாளர் ராமசந்திரன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.