செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க, கருங்குளம் ஒன்யக்குழுக்கூட்டம் நடந்தது. ஒனறியக்குழு உறுப்பினர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு சார்பில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கலந்து கொண்டார். மருதூர் மேலக்காலில் தண்ணீர் திறக்கவில்லை என்றால் மக்களை திரட்டி மாவட்ட ஆட்சியரை சந்தித்துபேச்சுவார்த்தை நடத்துவது, போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கணேசன், பாபு, வழக்கறிஞர் எட்வர்ட்ராஜா, சண்முகம், ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.