செய்துங்கநல்லூரில் போலி மது கடத்திய 2 பேர் போலிசாரால் கைது செய்யப்படடனர்.
செய்துங்கநல்லூர் போலிஸ் சப்இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி, முருகன் மற்றும் போலீசார் கருங்குளம் அருகே சுடலை கோயில் பகுதியில் நேற்று வாகன சோதனையில ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் கேனுடன் வந்த இருவரை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் ஒரு கேனில் போலி மதுபானம் வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது . இது குறித்து விசாரித்த போது, அவர்கள் கால்வாய் மாதாங்கோயில் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் வைகுண்டராமன் (22), பெருமாள் கோயில் தெரு முருகன் என்ற மயான முருகன் (55) என்பதும், தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், பைக் மற்றும் போலி மதுபானத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் திருவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.