வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் பெண்களிடம் ஆபாச பேச்சு பேசிய வழக்கறிஞர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டை சிவன்கோயில் மேலரதவீதியை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் அமிர்த ராஜ்(40). அவர் தனது மனைவியுடன் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த 6 பேர் அங்குள்ள பெண்ணிடம் ஆபாசமாக பேசியுள்ளனர். இதை தட்டி கேட்ட அமிர்த ராஜை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து அவர் முறப்பநாடு போலிசில் அவர் புகார் செய்தார்.
இதுகுறித்து சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்து தூத்துக்குடியை சேர்ந்த சரவணமுத்து, மாரிமுத்து குமார், காளிதாஸ், விஜி, வினு, பிரசாத் ஆகியோரை கைது செய்தனர். இதில் காளிதாஸ், பிரசாத் ஆகியோர் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிராதபன் விசாரித்து வருகிறார்.
.