மேல ஆழ்வார்தோப்பில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவனத்தில் இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் இணைந்து இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கிராம உதயம் கிளை அலுவலக மேலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். தனி அலுவலர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார்.
பகுதி பொறுப்பாளர் பெருமாள் மற்றும் கிராம உதயத்தில் பணிபுரிபவர்கள் கலந்து கொண்டு சட்டவிழிப்புணர்வு குறித்து பேசினார்.


