செய்துங்கநல்லூர் அருகே உள்ள பற்பநாதபுரம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி மேரி தம்பதியினர். இவர்களுக்கு விஜயகுமார், ஜெயகுமார், சூசை சிவா, சின்னத்தம்பி, சுவிட்டி என ஐந்து பேர் உள்ளனர்.
அந்தோணி கிருஷ்ணாபுரம் கெபி அருகே கரும்புச்சாறு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் தனது அண்ணன் விஜயகுமார் திருநெல்வேலியில் இருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அவரை செய்துங்கநல்லூருக்கு வந்து வீட்டிற்கு கூட்டி வருவதற்காக தம்பி சூசை சிவா பற்பநாதபுரத்தில் இருந்து பைக்கில் வந்தார். அவர் அய்யனார்குளம்பட்டி அருகே வரும்போது நிலை தடுமாறி அருகில் இருந்த கல்லில் பைக் மோதியது. இதில் சூசை சிவா படுகாயமடைந்தார்.
அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் உதவி ஆய்வாளர் கருத்தையா வழக்கு பதிவு செய்தார். காவல் ஆய்வாளர் ராஜசுந்தர் விசாரனை மேற்கொண்டு வருகிறார்.
நடந்த அடிக்கடி விபத்து நடைபெறும் இடமாக உள்ளது. இந்த இடத்தில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வளைவு இருக்கிறது. எனவே இந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பற்பநாத புரத்தினை சேர்ந்த டி.ஜே.தனுஷ் காவல்துறை அதிகாரி மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு மனு அனுப்பியுள்ளார். இந்த இடத்தில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


