வல்லநாட்டில் காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை காசநோய் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இதனை அனுசரிக்கும் விதமான தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி தலைமையில் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு உதவி மருத்துவ அலுவலர் டாரில், சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவமல்லா மேற்பார்வையாளர் இளங்கோ ராஜன் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் உறுதிமொழி வாசிக்க அனைவரும் அதை தொடர்ந்து வாசித்து காசநோய் இல்லாத தூத்துக்குடியை 2025க்குள் உருவாக்குவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சமுதாய நலச்செவிலியர் சாந்தாகுமாரி, நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துநர் ஐயம்மாள், கிராம சுகாதார செவிலியர்கள் சொர்ணத்தம்மாள், பேச்சியம்மாள், ரொனால்டு டிக்ஸி, மருத்துவமனை பணியாளர் வேம்பன் சுகாதாராத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சித்த மருத்துவ மருந்தாளுநர் வெங்கடேசன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரகீம் கீரா செய்திருந்தார்.


