மருதூர் அணைக்கட்டில் பரிதாமாக தந்தை கண் முன்பே வெள்ளத்தில் மகனை ஆற்று வெள்ளம் அடித்து சென்றது.
கலியாவூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன், தச்சு தொழிலாளி. இவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன் நாணல்காட்டை சேர்ந்த நிஷாந்திக்கும் திருமணம் நடந்தது. இருவரும் கலப்பு திருமணம் செய்திருந்தனர். எனவே உறவினர்கள் எதிர்ப்பை மீறி தனிக்குடித்தனம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு பார்த்திபன் வயது 8, கார்த்திக் வயது 5 ஆகியோர் உள்ளனர்.
இருவருக்கும் பள்ளி விடுமுறை காரணத்தினால் வீட்டில் இருந்து வந்தனர். இதற்கிடையில் நேற்று காலை மழை பெய்து கொண்டிருந்த காரணத்தினால் வேலைக்கு செல்லவில்லை. மருதூர் அணையில் பெய்த மழை காரணமாக தண்ணீர் தெப்பி விழுகிறது. எனவே இதை வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். சுப்பிரமணியனும் தன் இரு மகன்களை கூட்டிக்கொண்டு வந்தார்.
அணைக்கட்டு வழியாக இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று உள்ளே அணை தப்பி தண்ணீர் விழுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது பார்த்திபன் தெப்பி விழும் அணை தண்ணீரில் நடந்து செல்ல ஆசைப்பட்டான். சுப்பிரமணியனும் அவனை கூட்டிக்கொண்டு தண்ணீர் தெப்பி விழும் இடம் வழியாக நடந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பார்த்திபன் அணை சரிவில் தண்ணீர் சிக்கி ஆற்று வெள்ளத்தில் அடித்து சென்றான்.
அனைவரும் கதறினர். ஆனால் தண்ணீர் அதிகமாக சென்ற காரணத்தினால் அவனை காப்பாற்ற இயலவில்லை. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் பஞ்சாயத்து தலைவர் சின்னசாமி முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தானர். இன்டஸ்பெக்டர் பாஸ்கர், சப்இன்ஸ்பெக்டர் ரபார்ட் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் மாசனமணி, கிராம நிர்வாக அதிகாரி முத்துகுமார் ஆகியோர் அங்கு வந்தனர். ஸ்ரீவைகுண்டம் தீயணைக்கும் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் மருதூர் அணைக்கட்டுக்கு வந்து தேடுதல் பணியை நிகழ்த்தினார். அணையினுள், மிக அதிகமாக முள்செடி இருநத காரணத்தினால் அவர்கள் தேடி இயலவில்லை. இதற்கிடையில் ஒரு பிரிவினர் முறப்பநாடு தடுப்பணையில் பார்த்திபன் உடல் கிடைக்குமா என தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
தொடர்டந்து தேடியும் பார்த்திபனின் உடல் கிடைக்கவில்லை. இதற்கிடையில் கிரவுன் மூலமாக தேடுதல் வேட்டையை தொடங்குவோம் என ஸ்ரீவைகுண்டம் தாசிலர்தார் கோபாலகிருஷ்ணன் பத்திரிககையாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.
மகனை இழந்த நிஷாந்தி தன் இளைய மகன் கார்த்திக்கை மடியில் வைத்துக்கொண்டு அழுதது மனதை உருக்கும் வகையில் இருந்தது.
தாசில்தார் உத்தரவு
இதற்கிடையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர்கள் அதிக வெள்ளம் வந்த காரணத்தினால் ஆற்றில் யாரும் குளிக்க கூடாது என உத்தரவு போட்டிருந்தனர். ஆனாலும் தற்போது இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டது விட்டது. இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தாமிரபரணி கரையோரத்தில் உள்ள மக்கள் யாரும் குளிக்கவோ அல்லது ஆற்றில் வேடிக்கை பார்க்கவே கூடாது என உத்தரவு போட்டுள்ளார். இதற்காக கண்காணிக்க வருவாய் ஆய்வாளர்கள் செய்துங்கநல்லூர், வல்லநாடு, தெய்வசெயல்புரம், ஸ்ரீவைகுண்டம் ஆகியவர்கள் தலைமையில் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
பார்த்திபன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தினை சேர்ந்தவர். எனவே அந்த குடும்பத்துககு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கலியாவூர் பஞ்சாயத்து தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
&&&


