
கருங்குளம் காமாட்சி அம்மன் கோயில் கொடைவிழாவை முன்னிட்டு மழை வேண்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
கருங்குளம் காமாட்சி அம்மன் கோயில் கொடைவிழா கடந்த4 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 ந்தேதி குடியழப்புடன் மாங்காப்பு சாத்தி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. 11 ந்தேதி காலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து பால்குடம் மற்றும் கரகம் எடுத்து ஊர்வலம் வந்தது. அதன்பின் அம்மனுக்கு சிறப்புஅபிசேகம் அலங்காரம் தொடர்ந்து மதியக்கொடை விழா நடந்தது. இரவு முளைப்பாரி ஊர்வலம் ஊர் சுற்றி வந்தது.இரவு அலங்காரம் தீபாரதனை இரவு கொடை விழா நடந்தது. 12 ந்தேதி காலையில் முளைப்பாரி ஊர்வம் பெண்களால் தாமிரபரணி ஆற்றங் கரைக்கு கொண்டு வரப்பட்டது. பின் அங்கு கும்பி அடித்து தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டது. அப்போது மழை வேண்டி பிராத்தனை நடந்தது. முளைபாரி அங்கம்மாள் தலைமையில் பெண்கள் நடத்தி வந்தனர். கொடை விழா ஏற்பாடுகளை பெருமாள் தலைமையில் வீரசைவ லிங்கத்தார் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.