செய்துங்கநல்லூர் அருகில் உள்ள நாட்டார்குளத்தில் உள்ள் பரி.யோவான் ஆலயத்துக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் அடிக்கல் நாட்டி சிறப்பு ஆராதனை நடத்தினார். திருமண்டல செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், சபை மக்கள் ஜோசப், மோசஸ், கனகராஜ் , சாது சுந்தர் சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் சேகர தலைவர் ஜேசுபாதம் தலைமையில் சபை ஊழியர் ராஞ்சித்குமார், நோவா மற்றும் சேகர , நாட்டார்குளம் சபை மக்கள் செய்திருந்தனர்.