
செய்துங்கநல்லூரில் உள்ளாட்ச தேர்தல் நடத்துவோருக்கான முதல் கட்ட பயிற்சி செய்துங்கநல்லூரில் உள்ள செயிண்ட்மேரீஸ் கல்வியல் கல்லூரியில் நடந்தது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் டிசம்பர் 13ம் தேதி முடிவடைகிறது. இன்று துவங்கும் இந்த வேட்புமனு தாக்கல் டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 16ம் தேதி வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. டிசம்பர் 18ம் தேதி வேட்புமனு தாக்கலை திரும்ப பெற கடைசி தேதியாகும். மேலும் ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செய்துங்கநல்லூரில் உள்ளது. இந்த கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 31 பஞ்சாயத்துகள் உள்ளன. கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தை பொறுத்தவரை தனித்தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்காக வேட்புமனுவை பெற 2 அலுவலர்களும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக வேட்புமனுவை பெற 3 அலுவலர்களும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக வேட்புமனுவை பெற 6 அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வார்டு உறுப்பினர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்பவர்களிடம் வேட்புமனுவை பெற அந்தந்த பஞ்சாயத்துகளில் தனியாக ஒரு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆலந்தா, ஆழிகுடி, ஆறாம்பண்ணை, ஆழ்வார்கற்குளம், எல்லைநாயக்கன்பட்டி, கலியாவூர், கால்வாய், கருங்குளம், கீழபுத்தனேரி, கீழவல்லநாடு, கொங்கராயகுறிச்சி, மணக்கரை, முத்தாலங்குறிச்சி, மு.கோவில்பத்து, மு.புதுக்கிராமம், நாணல்காடு, பூவாணி, இராமானுஜம்புதூர், சிங்கத்தாகுறிச்சி, செக்காரக்குடி, செய்துங்கநல்லூர், செக்காரக்குடி, செய்துங்கநல்லூர், சேரகுளம், தாதன்குளம், தெற்கு காரசேரி, வடவல்லநாடு, வடக்குகாரசேரி, வல்லகுளம், வல்லநாடு, வசவப்பபுரம், விட்டிலாபுரம், வி.கோவில்பத்து. ஆகிய 31 பஞ்சாயத்துக்கள், 16 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் கருங்குளம் ஒன்றியத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதற்கிடையில் ஊரக உள்ளாட்சி சாதரண தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி செய்துங்கநல்லூரில் உள்ள புனித மேரீஸ் கல்வியல் கல்லூரியில் வைத்து நடந்தது. ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தேர்தல் அதிகாரி சசிரேகா தலைமை வகித்தார் ஒன்றிய ஆணையாளர் சுப்பு லெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுல்தான் அலாவூதீன், ஸ்டிபன் ரத்ன குமார், லெட்சுமணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பயிற்சியில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலாசனை மற்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.