தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள மிக பழமையான ஆலயங்களில் கொங்கராயகுறிச்சி பொன்னுருதி அம்மன் சமேத வீரபாண்டீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். தென் சீர்காழி என போற்றப்படும் இந்த ஆலயத்தில் சிறப்பான சட்டநாதர் வணங்கப்பட்டு வருகிறார். இந்த ஆலயம் கும்பாபிசேகம் எப்போது நடந்தது என யாருக்குமே தெரியாமல் இருந்தது. சுமார் 100 வருடங்களை தாண்டி தற்போது இந்த கோயிலில் திருப்பணி நடந்தது. தொடர்ந்து வருகிற ஜனவரி 30 ந்தேதி ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மாசனமுத்து தலை மையில் கும்பாபிசேகம் நடை பெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்களும் , திருப்பணி கமிட்டியினரும் செய்து வருகிறார்கள்.
இந்த கும்பாபிசேகத்திற்கான அழைப்பிதழ் முறைப்படி ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முக நாதனுக்கு ஊர் மக்கள் சார்பில் வழங்கப் பட்டது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் திருப்பணி கமிட்டியினர் கலந்து கொண்டனர்.


