கருங்குளம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலை யொட்டி கடும் போட்டி நிலவியுள்ளது. கூட்டணி கட்சியினர் அனைவரும் மனுதாக்கல் செய்த காரணத்தினால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கருங்குளம் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர் பதவி, 16 ஒன்றிய கவுன்சிலர் பதவி, 31 பஞ்சாயத்து தலைவர் உள்பட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் வேட்பு மனுதாக்கல் இறுதி நாளான நேற்று அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் வேட்பு மனுதாக்கல் செய்த காரணத்தினால் செய்துங்கநல்லூர் பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் முன்புள்ள சாலையில் குவிந்தனர். இவர்களை கட்டுபடுத்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சுரேஷ் குமார், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் தலைமையில் ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். வேட்டபாளருடன் நான்கு பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று மாலை 5 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்தது.
11 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 10 பேரும், 13 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 5 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கருங்குளம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 16 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 112 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 1 வது வார்டில் 9 பேரும், 2 வது வார்டில் 7 பேரும், 3 வதுவார்டில் 9 பேரும், 4 வது வார்டில் 6 பேரும், 5 வது வார்டில் 9 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
6 வார்டில் 8 பேரும், 7 வது வார்டில் 8 பேரும், 8 வது வார்டில் 5 பேரும், 9 வது வார்டில் 6 பேரும், 10 வது வார்டில் 12 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
11 வது வார்டில் 7 பேரும், 12 வது வார்டில் 6 பேரும், 13 வது வார்டில் 7 பேரும், 14 வது வார்டில் 4 பேரும் 15 வது வார்டில் 4 பேரும், 16 வது வார்டில் 5 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இங்குள்ள 31 பஞ்சாயத்துகளில் 186 பேர் போட்டியிடுகிறார்கள்.
இதில் ஆலந்தா 11, ஆழிகுடி 5, ஆழ்வார்கற்குளம், 2, ஆராம்பண்ணை 7, எல்லைநாயக்கன் பட்டி 5, கலியாவூர் 4, கால்வாய் 7, கருங்குளம் 13, கீழபுத்தனேரி 7, கீழ வல்லநாடு 6, கொங்கராயக்குறிச்சி 5, மணக்கரை 5, முத்தாலங்குறிச்சி 5, முறப்பநாடு கோவில்பத்து 4, முறப்பநாடு புதுகிராமம் 5, நாணல்காடு 5, பூவாணி 10, இராமானுஜம்புதூர் 4, சிங்காத்தாகுறிச்சி 4, செக்காரக்குடி 5, செய்துங்கநல்லூர் 14,சேரகுளம் 6, தாதன்குளம் 4, தெற்குகாரசேரி 2, வடவநல்லநாடு 7, வடக்குகாரசேரி, 5, வல்லக்குளம் 4, வல்லநாடு 5, வசவப்பபபுரம் 3, விட்டிலாபுரம் 4, விட்டிலாபுரம் கோவில் பத்து 12 ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
நாளை மனு மீது பிரிசீலனை நடைபெறுகிறது. மேலும் இறுதி பட்டியல் வெளியிடும் போது களத்தில் நிற்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
கூட்டணியில் குழப்பம்.
மாவட்ட கவுன்சிலர் 11 வார்டில் கஸ்தூரி (சுயே), திவ்யா ( பி.ஜே.பி) பாலசரஸ்வதி(அ. இ. அ.திமுக) பஞ்சவர்ணம் ( இந்திய தேசிய காங்கிரஸ்) வேல்விழி(திமுக), ராணி (சுயே), செல்வி ( திமுக) பிருந்தா(சுயே), இந்து பிரியதர்சினி ( சுயே),ஆறுமுக வடிவு (த.மா.க), மேரி ( புதிய தமிழகம்)
இதில் அமமுக சார்பில் சின்னம் வராத காரணத்தினால் அந்த கட்சியை சேர்ந்த கஸ்தூரி சுயேட்சையாக போட்டியிடுகிறார். திமுகவும் காங்கிரஸ் கூட்டணியாக இருக்கிறார்கள். ஆனால் இங்கு இரண்டு கட்சியை சேர்ந்தவர்களும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்கள். அதுபோலவே ஒரே கூட்டணியை சேர்ந்த பாரதிய ஜனதாகட்சியும், அ.திமுகவும், தமிழ் மாநில காங்கிரஸ், புதியதமிழகமும் மனுதாக்கல் செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
13 வது மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 6 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
ராமகனி( பி.ஜே.பி), பேச்சியம்மாள் (அதிமுக) புனிதவதி (இந்திய தேசிய காங்கிரஸ்), வள்ளிதாய்(பி.ஜே.பி), ராஜாத்தி (சுயே) ரேகா(த.மா.கா), ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். இதில் அதிமுக கூட்டணியை சேர்ந்த பி.ஜே.பி. அதிமுக, த.மா.க ஆகியோர் போட்டியிடுவதால் கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.