சிங்கத்தா குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. சிங்கத்தாகுறிச்சி மருத்துவ அலுவலர் கிருஷ்ணஜோதி தலைமை தாங்கினார். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரகீம் ஹீரா வரவேற்றார். காசநோயாளிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. அதன் பின் சளி பரிசோதனை நடந்தது. தேவைபட்டவர்களுக்கு 2 ஆயிரம் மதிப்புள்ள சிறப்பு சளி பரிசோதனை செய்ய தூத்துக்குடி மருத்துவமனை நெஞ்சக பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். சுகாதாரப் பணியாளர் லியோன் ஆனந்தராஜ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு இணைந்து செய்திருந்தனர்.