செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் நிதிசார் மற்றும் மின்னனு பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம் நடந்தது
கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் அன்சலாம் ரோஜர் முன்னிலை வகித்தார். செய்துங்கநல்லூர் தமிழ்நாடு கிராம வங்கிமேலாளர் சிவசங்கர் வரவேற்றார். பாண்டியன் கிராம வங்கி முன்னாள் ஓய்வு பெற்ற மேலாளர் கார்த்திகேயன் வங்கி சேவைகள் நிதிசார்பு கல்வி விழிப்புணர்வு, டிஜிட்டல் சேவை மற்றும் அரசின் பல்வேறு சமுகப் பாதுகாப்பு திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து பேசினார். இதில் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். துணை ஆய்வாளர் இராஜாராம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இயந்திரவியல் துறை தலைவர் ஆறுமுகசேகர் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.