
செய்துங்கநல்லூர் அருகே உள்ள அரசர் குளத்தில் காமராஜர் 118 ஆவது பிறந்த நாளையொட்டி பாஜக கட்சியினர் கோட்ட தலைவர், மாவட்டம் தலைவர், ஒன்றிய தலைவர்கள், பாஜக தொண்டர்களுடன் காமராஜர் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் பாஜக கோட்ட பொறுப்பாளர் ராஜா, மாவட்ட செயலாளர் சங்கர், கருங்குளம் ஒன்றிய தலைவர் கேசவன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் பிரிவு மாவட்ட தலைவர் குணசேகரன், அமைப்புசாரா மாவட்ட தலைவர் சித்திரை, மாவட்ட விவசாய அணி மாரியப்பன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தலைவர் சாமிநாதன், சித்திரவேல், பூல்பாண்டியன், சரவணன், பிரம்மையா, ஐகோர்ட்டு ராஜா, கேபிள் குமார், செல்வின், மற்றும் திரளான பாஜக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.