செய்துங்கநல்லூரில் விபத்து
பஞ்சாயத்துத் தலைவர் கணவர் மீது மோதி விட்டுத்
தப்பி ஓடிய டிப்பர் லாரி
செய்துங்கநல்லூர் புதிய பள்ளிவாசல் அருகே தாதன்குளம் பஞ்சாயத்து தலைவர் கணவர் மீது மோதி விட்டு தப்பி ஓடிய டிப்பர் லாரியால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் தாதன்குளம் பஞ்சாயத்துத் தலைவராக பணியாற்றி வருபவர் சீதா லெட்சுமி. இவரது கணவர் சுடலை (49). இவர் இன்று காலை 9.45 மணிக்கு செய்துங்கநல்லூரில் இருந்து சிவந்தி பட்டி ரோட்டில் மோட்டார் பைக்கில் திரும்பும் போது, எதிரே வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. அதன் பின் அந்த லாரி நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த சுடலை பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அப்போது அககம்பககத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து அவருக்கு முதலுதவி செய்தனர்.அதன் பின் 108 வாகனத்துக்கு போன் செய்தார்கள். செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெகடர் அருள்ரோஸ்லின் சம்பவ இடத்துக்கு வந்தார். 108 வரத் தாமதமான காரணத்தினால் போலீஸ் வேனில் அவரை ஏற்றி பாளை அரசு மருத்துவ மனைக்கு அவரை கொண்டு சென்றனர். மேலும் தப்பியோடிய லாரியையும் , அதன் டிரைவரையும் போலி சார் தேடி வருகிறார்கள்.
போலிசாருககு பாராட்டு
பெரும்பாலுமே விபத்து நடந்தால், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றி வர 108 வரவேண்டும் என்று காத்து இருப்பதே வாடிக்கையாக இருந்தது. ஆனால் செய்துங்கநல்லூர் போலிசார் , தங்களது ஜுப்பில் பாதிக்கப்பட்டவரை ஏற்றிக் கொண்டு உடனடியாக பாளை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். இதற்குக் காரணமான இன்ஸ்பெகடர் அருள்ரோஸ்லின் மற்றும் போலி சாரை பொதுமககள் பாராட்டினர்.


