செய்துங்கநல்லூரிலுள்ள கருங்குளம் யூனியன் அலுவலகத்தில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஹோமியோபதி மருத்துவர் ஆலோசனையின்படி ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், தலைமையில் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் கொராணா வைரஸ் அதிவேகமாக பரவி கொண்டிருக்கும் சூழலில், நோய் தொற்று பரவாமல் தடுக்க, அரசு அலுவலர்கள், ஊழியர்களை, கொண்டு நோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது,
நோய் தொற்று பரவாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் கருங்குளம் யூனியன் அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் மண்டல அலுவலர்கள் ஊழியர்களுக்கு வழங்கினர்
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், தலைமை வகித்தார் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், முன்னிலை வகித்தார் அதிமுக பிரதிநிதி ராஜேந்திரன், ஹோமியோபதி மருத்துவர் பார்த்திபன், யூனியன் பிடிஓ சுப்புலட்சுமி, வெங்கடாசலம், துணை பிடிஓ லட்சுமணன், ஸ்டீபன் ரத்தினகுமார், பரஞ்சோதி, அரசு வழக்கறிஞர் அன்பு அங்கப்பன்,ஒன்றிய கவுன்சிலர்கள் பரமேஸ்வரன், முத்துராமலிங்கம், கந்தசாமி, எண்ணாயிரம், உட்பட கலந்து கொண்டனர்


