கருங்குளம் யூனியன் அலுவலகத்திற்கு உட்பட்ட 31 பஞ்சாயத்து தலைவர்களுடனும் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், தலைமையில் பிடிஓ சுப்புலட்சுமி வெங்கடாசலம் பஞ்சாயத்து தலைவர்களிடம் என்னென்ன கோரிக்கைகள் இருக்கிறது என்று கேட்டு அறிந்தனர், கடந்த 80 நாட்களுக்கும் மேலாக கொராணா தூய்மை பணி சுகாதார பணிகளில் ஈடுபட்டு இருந்தீர்கள் அதனால் கூட்டங்களை ஏற்படுத்த முடியவில்லை இப்பொழுது படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப் பட்ட தருணத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து பஞ்சாயத்து தலைவர்களின் கோரிக்கையை கேட்கப்பட்டு கிராமத்து மக்களுக்கு அடிப்படை வசதிகளை என்னென்ன எப்படி செய்ய வேண்டும் என்று அறிவுரைகளை வலியுறுத்தினர்.
இந்நிகழ்வில் சேர்மன் கோமதி ராஜேந்திரன், பி டி ஓ சுப்புலட்சுமி, வெங்கடாசலம், ஒன்றிய பொறியாளர் பீர்முகமது, துணை பி டி ஓ ஸ்டீபன் ரத்தினகுமார், முத்துலட்சுமி, பரஞ்சோதி , மற்றும்31 பஞ்சாயத்து தலைவர்களும், கலந்து கொண்டனர்.


