
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் சூரிய கிரகணத்தினையொட்டி வானத்தில் சூரியனின் சிறப்பு தோற்றத்தினை நமது ஸ்ரீவைகுண்டம் டுடே நியூஸ் உதவி ஆசிரியர் சுடலைமணி செல்வன் பல்வேறு கோணத்தில் எடுத்த படங்கள் இப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இன்று காலை 9.15 முதல் 11.10 வரை சூரிய கிரகணம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி சாதரண கண்களால் சூரியனை பார்க்க கூடாது, அதற்கு கொடுக்கப்பட்ட கருவி மூலம் தான் பார்க்க வேண்டும். கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது என கூறப்பட்டிருந்தது. அதுபோலவே விடியல் காலம், சாயங்காலம் போல காட்சியளித்தது. வானம் மப்பும் மந்தாரமாகவும் காட்சியளித்தது. சிலர் விடிந்ததும் அடைந்து விட்டதோ என எண்ணத்தோன்றியது. சிலருக்கு மழைவரும் போல அதனால் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது என நினைத்தனர். ஆனால் வித்தியாசமான தோற்றத்துடன் வானம் காணப்பட்டது. தொலைக்காட்சியிலும் இந்த நிகழ்ச்சி படப்பிடித்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. சூரிய கிரகணம் பற்றி அறிந்தவர்கள் தங்களது மாடியில் நின்று சூரிய கிரகணத்தினை புகைப்படம் எடுத்தனர். காலை 9.15 வானத்தில் சூரிய கிரகணத்தினை செய்துங்கநல்லூர் பொன்சொர்ணா ஸ்டுடியோ முன்பிருந்து தனது போனில் படம் எடுத்தார் நமது ஸ்ரீவைகுண்டம டுடே நியூஸ் சப் எடிட்டர் சுடலைமணி செல்வன். வானத்தில் சூரியனும் நிலவும் உள்ள காட்சி அதில் பதிவாகி உள்ளது. அந்தபதிவை இந்த பக்கத்தில் பதிவிடுகிறோம்.
இதுபோல் சூரிய கிரகணத்தினை முன்னிட்டு செய்துங்கநல்லூர் ஆர்.சி . தெருவில் உரலில் உலக்கை நின்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் வெண்கல கிண்ணத்திலும் உலக்கை நின்று ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.