தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் வாக்கு எண்ணுவோருக்கான பயிற்சி முகாம் செயிண்ட் மேரீஸ் கல்வியல் கல்லூரியில் நடந்தது.
கருங்குளம் ஒன்றியத்தில் கடந்த டிசம்பர் 27 ந்தேதி தேர்தல் நடந்தது. வாக்கு பெட்டிகளை செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் பலத்த காவலுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது மேலும் ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடை பெற்றது. வாக்கு எண்ணிக்கை செய்வோருக்கான பயிற்சி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தேர்தல் அதிகாரி சசிரேகா தலைமை வகித்தார் ஒன்றிய ஆணையாளர் சுப்பு லெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுல்தான் அலாவூதீன், ஸ்டிபன் ரத்ன குமார், லெட்சுமணன் உள்பட பலர் கலந்துகொண்டு பயிற்சிகளை நடத்தினர்.
இந்த பயிற்சியில் வாக்கு எண்ணிக்கை செய்வது எப்படி என மேற்பார்வையாளர் மற்றும் உதவியாளருக்கு ஆலோசனை மற்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.