
கருங்குளம் வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு ஆரம்ப ப்பள்ளிஆசிரியர் கூட்டணி கருங்குளம் வட்டார நகர கிளை சார்பில் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுதி மாநிலந்தழுவிய ஆசிரியர் சந்திப்புப் பிரச்சார இயக்கமும் அதன் தொடர்ச்சியாக வட்டாரத் தலைவநகரங்களில் பெருந்திரள் முறையீடு மற்றும் ஆர்ப்பாட்டமும் நடந்தது. வட்டாரத் தலைவர் எபனேசர் தலைமை வகித்தார். வட்டாரத் துணைத்தலைவர் மலர்கொடி, வட்டார துணைச் செயலாளர் சுடலை முத்து, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் துணைத்தலைவர் வேலாயுதம் வரவேற்றார். வட்டார செயலாளர் லூயிசு பூ.ராயன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். முன்னாள் மாவட்டச் செயலாளர் முத்தையா வாழ்த்துரை வழங்கினார். வட்டாரப்பொருளாளர் சக்தி நன்றி கூறினார்.