செய்துங்கநல்லூர் மெயின் ரோட்டில் வேகத்தடை மிக அவசியம் என்று ம.ம.க மாவட்ட செலயாளர் மோத்தி முசம்பல் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை திருச்செந்தூர் மெயின் ரோட்டில் செய்துங்கநல்லூர் மிக முக்கிய கிராமமாகும். இந்த கிராமத்தில் காவல் நிலையம் , வங்கி கள், வாரசந்தை, கருங்குளம் யூனியன் அலுவலகம், கால்நடை ஆஸ்பத்திரி, ரயில் நிலையம் உள்பட அலுவலகங்கள் உள்ளதால் போக்கு வரத்து மிக அதிகமாக காணப்படுகிறது. செய்துங்கநல்லூர் பஜாரில் சாலையை அகலபடுத்தவேண்டும் மேலும் விபத்து ஏற்படாமல் இருக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் செய்துங்கநல்லூரில் இருபுறமும் சாலையை விரிவு படுத்த நடவடிக்கை எடுத்தது நெடுஞ்சாலை துறை. தற்போது மரங்களை அப்புறப்படுத்தி செய்துங்கநல்லூரின் இருபுறமும் சாலை அகலபடுத்தப்பட்டது. எனவே இருபுறமும் இருந்தும் வரும் வாகனங்கள் வேகமாக வருகிறது. ஊருக்குள் வரும் போது குறுக்கலான சாலையாலும், சாலையில் உள்ள பள்ளத்தினாலும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறதது.
இதுகுறித்து ம.ம.க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மோத்தி முசம்பல் கூறும் போது, செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் கிராமமாகும். இங்கு பல அலுவலங்கள் உள்ளன. வாரசந்தையும் புதன்கிழமை தோறும் நடந்து வருகிறது. சந்தையின் போது பல ஆயிரம் மக்கள் கூடுவார்கள். இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர் வாகனங்கள் வந்து செல்கின்றன. தற்போது செய்துங்கநல்லூரின் இருபுறமும் சாலையை அகலப்படுத்தி விட்டனர். ஆனால் ஊருக்குள் சாலை குறுகலாக மிக மோசமாக குண்டும் குழியுமாக கிடக்கிறது. எனவே நல்ல சாலையில் வேகமாக வரும் வாகனம் ஊருக்குள் உள்ள சாதரண சாலையில் இறங்கும் போது நிலை தடுமாறி விபத்து ஏற்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஊருக்குள் வேகமாக வரும் போது சாலையை கடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே ஊருக்குள் உள்ள சாலையையும் சீரமைத்தும், ஊருக்குள் நுழையும் இடத்தில் வேகத்தடை அமைத்தும் தரவேண்டும்.
ஊருக்குள் கவனமாக செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுருத்தும் வண்ணம் விளம்பர பலகை வைக்க நெடுஞ்சாலை துறை ஏற்பாடு செய்ய வேண்டும். இப்பகுதியில் மிக பெரிய விபத்து ஏற்படும் முன்பு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து விரைவில் நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.